இந்தியா - ஆஸி. கடைசி ஒருநாள் போட்டி: தொடரை வெல்லப் போவது யார்?

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 09:38 am
india-to-play-last-odi-against-australia-in-delhi-today

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது. இதனையடுத்து தற்போது ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணியும், அடுத்த இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி கண்டன. இதனால் தொடர் 2-2 என சமநிலை வகிக்கிறது.

இந்நிலையில் இன்று 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மொஹாலியில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 350க்கும் மேல் ரன்கள் எடுத்தும் அதனை ஆஸ்திரேலிய அணி மிக எளிதாக எடுத்து வெற்றிப் பெற்றது. அந்தப் போட்டியில் தோனி  இல்லாதது பெரும் பின்னடைவாக இருந்ததாக பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய போட்டியிலும் தோனி விளையாடமாட்டார். எனவே கோலிக்கு இன்றும் சவால்கள் காத்திருக்கின்றன. 

மேலும் உலகக் கோப்பைக்கு முன்பான போட்டி என்பதால் தங்கள் திறமையை காட்ட இந்திய அணியினருக்கு இது முக்கியமான போட்டியாகவே திகழ்கிறது. இதுமட்டும் அல்லாமல் டி20 தொடரை  கைப்பற்றி சாதனைப் படைத்த ஆஸ்திரேலிய அணியினருக்கும் இன்றைய வெற்றி மிகவும் முக்கியமானதாக உள்ளது. 

இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close