ஒரு அணியில் 11 விராட் கோலிகள் இருக்க முடியாது: முத்தையா முரளிதரன்

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 10:27 am
cannot-have-11-virat-kohlis-in-the-team-muttiah-muralitharan

ஒரு அணியில் 11 கோலிகள், 11 சச்சின்கள், 11 பிராட்மேன்கள் இருக்க முடியாது என்று இந்திய அணியின் 2  தோல்விகள் மீதான விமர்சனங்கள் குறித்து பேசிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 போட்டிகளில் அதிகமான ரன்கள் எடுத்தும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கும் நிலையில் இந்திய அணியின் தோல்வி பெரும் விமர்சனங்களை கிளப்பி உள்ளது. 

இந்நிலையில், இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், "நாம் பொறுமைதான் காக்க வேண்டும். இந்திய அணி நன்றாகவே ஆடி வருகின்றனர். உலகக்கோப்பைக்காக சில, பல சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெற்றியின் பாதையில் சில தோல்விகள் ஏற்படவே செய்யும். ஏனெனில், ஒரு அணியில் 11 விராட் கோலிகளைக் கொண்டா ஆட முடியும்? ஒவ்வொரு வீரரும் மேட்ச் வின்னராக இருக்க முடியாது.

சில போட்டிகளில் வெல்வோம், சில போட்டிகளில் தோல்விகள் தவிர்க்க முடியாதது. அப்படியானால், ஒவ்வொரு அணியிலும் 11 விராட் கோலிகள், 11 சச்சின் டெண்டுல்கர்கள் 11 டான் பிராட்மேன்கள் தான் ஆட வேண்டும். இது சாத்தியமில்லை.

 

ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும். இந்திய அணி நன்றாக ஆடி வருகின்றனர், அவர்கள் மீது அதிக அழுத்தம் ஏற்றக்கூடாது” என அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close