தோனியின் அருமை தெரியாமல் விமர்சிக்கிறார்கள்: ஷேன் வார்னே

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 11:28 am
ms-dhoni-s-critics-have-no-idea-what-they-are-talking-about-says-shane-warne

தோனியின் அருமை தெரியாமல் பலர் அவரை விமர்சித்து வருவதாகவும் அவரது தேவை இந்திய அணிக்கு இன்றியமையாததாக உள்ளதாகவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் நிலையில்லாத ஃபார்ம் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அவர் உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற நிலையில் தோனியின் ஃபார்ம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

மேலும் அவரை சிலர் விமர்சனம் செய்தும் வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷேன் வார்னே பேசி உள்ளார். அவர் பேசும் போது, "தோனியை விமர்சனம் செய்கிறவர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல் பேசுகின்றனர். இந்திய அணியினருக்கு உலகக்கோப்பை போட்டித்  போன்ற தொடரில் தோனியின் தேவை அதிகமாக இருக்கிறது.

கடந்தாண்டு தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் தற்போது அவர் நல்ல ஃபார்மில் தான் இருக்கிறார். இந்தாண்டு அவர் விளையாடிய 9 ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 327 ரன்கள் அடித்துள்ளார். அவரது ஆவரேஜ் 81.75ஆக உள்ளது. 

தோனி சிறந்த விளையாட்டு வீரர். அணிக்கு தேவையான இடத்தில் அவர் எப்போது வேண்டும் என்றாலும் விளையாடுவார். இந்திய அணிக்கு அவரது அனுபவமும், தலைமை பண்பும் ஆட்டக்கலத்தில் தேவை. குறிப்பாக அவை கோலிக்கு மிகவும் உதவும்" என தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close