கடைசி ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி பேட்டிங்

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 01:21 pm
australia-have-won-the-toss-and-have-opted-to-bat

டெல்லியில்  இன்று நடைபெறும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாசில் வெற்றிப்பெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் வெற்றிப்பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

 

ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது. இதனையடுத்து தற்போது ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணியும், அடுத்த இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி கண்டன. இதனால் தொடர் 2-2 என சமநிலை வகிக்கிறது.

இந்நிலையில் இன்று 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இன்றைய போட்டியில் விஜய் சங்கர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். 

அணி விவரம்: 

இந்தியா அணி : ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராத் கோலி, கேதர் ஜாதவ், பண்ட், விஜய் சஙகர், குல்தீப் யாதவ், ஜடேஜா, சஹால், புவனேஷ்வர் குமார், பும்ரா

ஆஸ்திரேலியா அணி : பின்ச், கவாஜா, ஸ்டேய்னிஸ், ஹாண்ட்ஸ்கோம், மாக்ஸ்வல், டர்னர், அலேக்ஸ் கேரி, ரிச்சர்ட்சன், கம்மின்ஸ், லியொன், ஸாம்பா

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close