IPL 2019: சென்னை போட்டிக்கான டிக்கெட் விற்பனை 16ஆம் தேதி தொடக்கம்

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 01:55 pm
ticket-sales-for-csk-vs-rcb-opening-match-to-commence-on-march-16

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சி மைதானத்தில் மார்ச் 23 நடைபெற இருக்கும்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான தொடக்க ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை 16ம் தேதி தொடங்க உள்ளது. 

இந்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 12வது ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. முதல் இரண்டு வாரத்திற்கான அட்டவணை மட்டும் வெளியாகி உள்ளது. 

 

— Chennai Super Kings (@ChennaiIPL) March 12, 2019

 

இந்நிலையில் முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.

இதற்கான டிக்கெட் டிக்கெட் விற்பனை வரும் 16ம் தேதி  காலை 11.30 மணிக்கு தொடங்கும். டிக்கெட்டுகள் மொத்தம் விற்பனை ஆகும் வரை இது தொடரும்.

டிஎன்சிஏ மூலம் கவுண்டர் டிக்கெட் விற்பனையும் 11.30 மணிக்கு தொடங்கும். மீதமுள்ள சிஎஸ்கே உள்ளூர் ஆட்டங்கள் டிக்கெட் விற்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். சி, டி மற்றும் இ கீழ்பகுதி-ரூ.1300, சி மற்றும் இ-மேல் பகுதி ரூ.2500, விருந்தினர் டிக்கெட்டுகள்-ரூ.5000, ரூ. 6,500 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close