ஒரு நாள் கிரிக்கெட்:  இந்தியாவுக்கு 273 ரன்களை நிர்ணயித்தது ஆஸ்திரேலியா !

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 07:37 pm
cricket-india-vs-australia-india-need-273-runs-to-win

ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. 

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.  தொடக்க வீரர்களாக களம் இறங்கிய உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் ஆகியோர் நிதானமாக ஆடியதால், ஆஸ்திரேலியா 9.3 ஓவரில் 50 ரன்களை எடுத்தது. கவாஜா - ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி ஜோடி அபாரமாக விளையாடியது. கவாஜா 48 பந்தில் அரைசதம் அடித்தார். 19.1 ஓவரில் 100 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா 26.5 ஓவரில் 150 ரன்னைத் எட்டியது. 

பும்ராவின் 48-வது ஓவரில் ஆஸ்திரேலியா நான்கு பவுண்டரிகள் அடித்தது. இதனால் ஆஸ்திரேலியா 250 ரன்னைத் தாண்டியது. கடைசி ஓவரில் 7 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்ற ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close