இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட்: 3-2 என தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 09:17 pm
cricket-australia-won-the-match

இந்தியா-ஆஸே்திரேலியாவுக்கு இடையேயான கடைசி மற்றும் 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது. இதனையடுத்து தற்போது ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணியும், அடுத்த இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி கண்டன. இதனால் தொடர் 2-2 என சமநிலை வகித்தது.

இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் ஆகியோர் நிதானமாக ஆடியதால், ஆஸ்திரேலியா 9.3 ஓவரில் 50 ரன்களை எடுத்தது. கவாஜா - ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி ஜோடி அபாரமாக விளையாடியது. கவாஜா 48 பந்தில் அரைசதம் அடித்தார். 19.1 ஓவரில் 100 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா 26.5 ஓவரில் 150 ரன்னைத் எட்டியது. 

பும்ராவின் 48-வது ஓவரில் ஆஸ்திரேலியா நான்கு பவுண்டரிகள் அடித்தது. இதனால் ஆஸ்திரேலியா 250 ரன்னைத் தாண்டியது. கடைசி ஓவரில் 7 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்ற ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.  

பின்னர் களம் இறங்கிய இந்தியா 50 ஓவரில் 237 ரன்களை எடுத்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3-2 என்ற கணக்கில் தொடைரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா..

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close