ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு தகுதியானவர்கள் தான்: விராட் கோலி

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 10:20 am
more-or-less-sorted-for-world-cup-except-for-one-spot-kohli

டெல்லியில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டி குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இந்த வெற்றிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதியானர்கள் தான் என தெரிவித்தார். 

தொடரை தீர்மானிக்கும் போட்டி நேற்று டெல்லியில் நடைப்பெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இதன் மூலம் அந்த அணி 3-2 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. 

இந்த தோல்விக்கு பின் பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, "எங்களால் சேஸ் செய்ய முடிந்த டார்கெட் என்று தான் நினைத்தோம். ஆனால் கடைசி ஓவர்களில் 15-20 ரன்கள் அதிகமாகிவிட்டன. ஒன்றிரண்டு ஓவர்கள் கூட பல மாற்றத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் இந்த மொத்த தொடரையும் பார்க்கும் போது ஆஸ்திரேலிய அணி மிகவும் வெற்றிப்பெற வேண்டும் என்ற பசியோடு, மிகவும் பேரார்வத்துடன் விளையாடினர். எனவே அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள் தான். கடிமான நேரத்தில் எங்களை விட அவர்கள் அழுத்தத்தை மிகவும் எளிதாக சமாளித்தார்கள். குறிப்பாக கடைசி மூன்று போட்டிகளில் சிறப்பாக கையாண்டார்கள். இந்த போட்டியில் நாங்கள் ஈரப்பதம் குறித்து எதுவும் யோசிக்கவில்லை. அது நம் கையில் இல்லை. தொடரை கைவிட்டதற்கு எந்த சாக்கும் சொல்லக்கூடாது. 

கிட்டத்தட்ட உலகக்கோப்பைக்கான அணி குறித்து முடிவு செய்துவிட்டோம். இன்னும் ஒரு விஷயம்குறித்து மட்டும் ஆலோசனை நடத்த வேண்டும்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close