டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 'ஃப்ரீ ஹிட்' எம்சிசி பரிந்துரை

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 11:24 am
shot-clock-standard-ball-free-hits-mcc-committee-s-recommendations-to-spice-up-test-cricket

டெஸ்ட் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அதில் ஃபீட் ஹிட் சேர்ப்பது உட்பட சில முக்கிய மாற்றங்களை கொண்டு வருவதற்கு மெரிலெபோன் கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. 

பெங்களூருல் முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக் கேட்டிங் தலைமையிலான எம்சிசியின் கூட்டம் நடைபெற்றது. இதில் கமிட்டீயல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் ஒருவராவார். 

இந்த கூட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கொண்டுவரப்பட வேண்டிய சில மாற்றங்கள் குறித்து பரிந்துரைக்கப்பட்டது. இதுகுறித்து முன்னர் நடத்தப்பட்ட ஆய்வில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ரசிகர்களில் 25 சதவீதம் பேர் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்லோ ஓவர் ரேட்ஸ் தான் அதன் மீதான ஆர்வத்தை குறைப்பதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இந்த  கூட்டத்திற்கு பின்  எம்சிசி கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்மை காலமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தாமதமாக பந்து வீசும் புகார் அதிகமாக எழுகிறது. இதை கவனத்தில் கொண்டு நேரத்தை கணக்கிட ஸ்கோர் போர்டில் டைமர் பொருத்தப்படும். ஓவர் முடிந்ததும் 45 வினாடியில் இருந்து கவுண்ட்டவுன் ஆரம்பிக்கும். இந்த நேரம், பந்தை எதிர்கொள்ளும் புதிய பேட்ஸ்மேனுக்கு 60 வினாடிகளாகவும், மாற்று பந்து வீச்சாளராக வருபவருக்கு 80 வினாடிகளாகவும் அதிகரிக்கப்படும். கவுண்ட்டவுன் ஜீரோவை எட்டும் போது பேட்டிங் அல்லது பந்து வீச்சுக்கு இரண்டு அணி தரப்பினரும் தயாராக இருக்க வேண்டும். கவுண்ட்டவுன் முடிந்ததும் ஆட்டத்தை தொடங்காவிட்டால் எச்சரிக்கை விடுக்கப்படும்.

இதே விதிமீறல் தொடர்ந்து நீடித்தால், சம்பந்தப்பட்ட அணி மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் எதிரணிக்கு 5 ரன் வழங்கப்படும். விக்கெட் வீழ்ச்சியின் போதும் இதே நேரம் முறை பின்பற்றப்படும். 

ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி போன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நோ-பால் வீசினால் ஃப்ரீ ஹிட் வழங்கப்பட வேண்டும். இதனால் சுவாரஸ்யம் அதிகமாகும். அத்துடன் குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் ஃப்ரீ ஹிட் முறை கொண்டு வரப்பட்டதும் நோ-பால் வீசுவது வெகுவாக குறைந்திருக்கிறது.

அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்க இருப்பதால் எல்லா டெஸ்ட் போட்டிகளுக்கும் (பகல்-இரவு டெஸ்டை தவிர்த்து) ஒரே மாதிரியாக தரமான பந்துகளை பயன்படுத்த வேண்டும்" என பல்வேறு திட்டங்களை பரிந்துரை செய்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close