முதல் முறையாக ஐபிஎல் மேட்ச் ஃபிக்சிங் குறித்து மனம் திறக்கும் தோனி

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 01:32 pm
ms-dhoni-to-break-silence-on-ipl-spot-fixing-row-that-saw-csk-being-banned-for-2-years

2013ம் ஆண்டு ஐபில் தொடரில் மேட்ச் ஃபிக்சிங் செய்ததாக சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது குறித்து முதன்முறையாக ஹாட்ஸ்டாரின் ஆவணப்படத்தில் தோனி பேசி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் உள்ளனர். உள்ளூரில் உள்ள இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த தொடர் கடந்த 11 வருடங்களாக நடைபெற்று வருகிறது. 

இதில் கடந்த 2013ம் ஆண்டு இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மேட்ச் ஃபிக்சிங் செய்ததாக 2015ம் ஆண்டு அந்த அணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த அணிகள் 2016 மற்றும் 2017ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை. 

கடந்தாண்டு இந்த அணிகள் தடை நீங்கி மீண்டு விளையாடினர். அந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனிடையே இந்த மேட்ச் பிக்சிங் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி எந்த கருத்தும் கூறவில்லை. அவர் அதன் பிறகு அளித்த பேட்டிகளிலும் இதுகுறித்து ஒருவார்த்தைக்கூட பேசவில்லை. இது அவர் மீது விமர்சனங்கள் எழ காரணமாக இருந்தது.

இந்தியாவின் பெரும் கிரிக்கெட் நட்சத்திரமாக இருக்கும் தோனி இது போன்ற சர்ச்சைக்கு மௌனம் காத்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து தோனி மனம் திறந்ததாக கூறப்படுகிறது. 

ஹாட்ஸ்டாரில் 'ரோர் ஆஃப் தி லயனஸ்' என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில் மேட்ச் பிக்சிங் விவகாரம் குறித்து தோனி பேசியுள்ளார் என்று இதனை இயக்கிய கபீர் கான் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், "தோனியை அது போன்று பேசி யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். அவர் முதன்முறையாக இந்த விஷயம் குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் 7 முதல் 8 மணி நேரம் வரை பேட்டியளித்தார். இதில் மிகவும் எமோஷனலான தோனியை பார்ப்பீர்கள். 

மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் சட்டரீதியாக, நீதிமன்றம் முன் என்ன நடந்தது என்பதை தான் நாம் பார்த்தோம். ஆனால் அதற்கு பின் இதனால் 2 ஆண்டுகள் தடையான அணிகளின் வீரர்கள் என்னவெல்லாம் சந்தித்தார்கள் என பலவற்றை நாம் இந்த ஆவணப்படத்தில் பார்ப்போம்" என்றார். 

எனவே தோனி ரசிகர்கள் மட்டும் அல்லாமல், சர்வதேச அளவில் கிரிக்கெட் ரசிகர்களும்... கிரிக்கெட் ஆர்வலர்களும் எதிபார்த்திருக்கின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close