கிரிக்கெட் வீரர் ஷமி மீது குற்றப்பத்திரிகை

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 08:46 am
shami-charged-with-sexual-harassment-and-domestic-violence

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவரது மனைவி பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்த நிலையில், காவல்துறையினர் ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தன்னை கொடுமை படுத்துவதாகவும், பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாகவும் அவரது மனைவி ஹஸின் ஜஹான் கடந்த ஆண்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், சுமார் ஓராண்டு காலத்திற்கு பிறகு ஷமி உட்பட அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது பாலியல் துன்புறுத்தல், மனைவியை கொடுமை படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். 

இது குறித்து பேசிய ஷமியின் வழக்கறிஞர், அவர் மனைவி சுமத்திய குற்றச்சாட்டுகளில் மிக கடுமையானதான பாலியல் வன்கொடுமை, தாக்கி கொடுமை செய்தது, கொலை முயற்சி ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 

முன்னாள் மாடலான ஷமியின் மனைவி ஹஸின் ஜஹான், கடந்த ஆண்டு சமூகவலைதளங்களில் ஷமி தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் பல்வேறு பெண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close