விஜய் சங்கர் ஒன்றும் பண்ட் போன்ற வீரர் அல்ல: சஞ்சய் மஞ்ரேக்கர்

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 10:16 am
sanjay-manjrekar-advises-vijay-shankar-to-model-his-game-in-virat-kohli-style

விஜய் சங்கர் தனது ரோல்மாடலாக விராட் கோலியை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் விஜய் பெரிய ஷாட்கள் அடித்தாலும் அவர் ஒன்றும் ரிஷப் பண்ட் போன்ற வீரர் அல்ல என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேகர் தெரிவித்துள்ளார். 

உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் இன்றளவும் இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் நிலை ஏமாற்றம் அளிக்கக்கூடிதாகவே உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேகர் ட்வீட் செய்துள்ளார். 

அந்த ட்வீட்டில், “முடிவில் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் இந்திய மிடில் ஆர்டர் வரிசை 2019 உலகக்கோப்பையில் பிரச்னைகள் உள்ளது தான். கடைசி போட்டியில் ரிஷப் பண்ட், விஜய் சங்கர் ஆடியது உள்ளபடியே கடும் ஏமாற்றம் அளிக்கிறது.

தங்கள் திறமையை நிரூபிக்க இதைவிட பெரிய வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்திருக்க முடியாது. விஜய் சங்கர் பெரிய ஷாட்களை அடிக்கிறார். ஆனால் அவர் ஒன்றும் ரிஷப் பண்ட் அல்ல. தரையோடு தரையாக ஆடி ஸ்கோரிங் ரேட்டையும் நல்ல நிலையில் வைத்திருக்க கற்றுக் கொள்ள வேண்டும். கேப்டன் கோலி ஆடுவது போல் ஆடக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கடுமையாக விமர்சனம் வைத்துள்ளார். 

மேலும் அவர், “ஆஸ்திரேலியாவுக்காக மகிழ்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜய் சங்கர் மீதான அவரின் விமர்சனத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close