கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 11:13 am
supreme-court-revokes-life-ban-on-s-sreesanth-asks-bcci-to-review-quantum-of-punishment-in-three-months

ஐபிஎல் சூதாட்டத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஶ்ரீசாந்த்  மீதான வாழ்நாள் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் இதுகுறித்து 3 மாதத்தில் பரிசீலித்து முடிவெடிக்க பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி  உள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஸ்ரீசாந்த் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். இதற்காக சில நாள்கள் சிறையில் இருந்த ஶ்ரீகாந்த் மீது பி.சி.சி.ஐ வாழ்நாள் தடை விதித்து  நடவடிக்கை எடுத்தது. ஆனால், இதற்காக நீதிமன்றப் படிக்கட்டு ஏறிய ஸ்ரீசாந்த் அதில் வெற்றியும் பெற்றார்.

ஆனால், அவர் மீதான வாழ்நாள் தடையை நீக்க பி.சி.சி.ஐ மறுத்துவிட்டது. பி.சி.சி.ஐயின் முடிவை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். இந்நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிபதிகள்  அசோக் பூஷன் மற்றும் கேஎம் ஜோசப் அடங்கிய உச்சநீதிமன்ற பென்ச் தீர்ப்பளித்துள்ளது. இதில் அவர் மீதான தடையை நீக்கி உத்தரவிட்ட நீதிமன்றம், இதுகுறித்து 3 மாத காலத்திற்கு பிசிசிஐ பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

இதுவரை இது போன்ற குற்றங்களுக்கு உலகில் எந்த கிரிக்கெட் வீரருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close