மசூதியில் துப்பாக்கிச்சூடு: நியூசிலாந்து-வங்கதேசம் இடையேயான கிரிக்கெட் போட்டி ரத்து

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 12:43 pm
final-match-between-nz-and-ban-called-off

நியூசிலாந்தில் இன்று காலை மசூதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இருந்து வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நூலிழையில் தப்பியதை அடுத்து 3வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஒரு மசூதியில் இன்று மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் தொழுகையில் இருந்த ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அப்போது தொழுகைக்கு அங்கு சென்றிருந்த வங்கதேச வீரர்களும் அங்கிருந்து தப்பி ஓடி அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார்கள்.

இந்த சம்பவத்தையடுத்து நாளை கிறிஸ்ட்சர்ச் நகரில் நடக்க இருந்த 3வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன் கூறுகையில், "நியூஸிலாந்தில் இதற்கு முன் இதுபோன்ற மோசமான வன்முறைச் செயல்கள் நடந்ததில்லை, அதற்கு இடமும் இல்லாமல் இருந்தது. அப்படி இருக்கையில் இன்று நடந்த வன்முறைச் செயலை  இதை நியூஸிலாந்தின் கறுப்பு நாள் என்று சொல்வேன்.

மக்கள் சுதந்திரமாக தங்கள் வழிபாட்டை நடத்தி வந்த இடத்தில், பாதுகாப்பாக இருந்த இடத்தில் இந்த மோசமான துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது. இந்த செயலைச் செய்தவர்கள் திட்டமிட்டு இதை நிகழ்த்தியுள்ளார்கள். இதுபோன்ற செயலுக்கு நியூசிலாந்து சமூகத்தில் இடமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close