உலகக்கோப்பை தொடருக்கு முன்பான கூட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர்

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 01:40 pm
steve-smith-david-warner-to-join-australian-team-for-world-cup-bound-meeting-in-dubai

துபாயில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பான அணியின் கூட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணைந்துக்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைக்காலம் அனுபவித்து வரும் ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவன் ஸ்மித் மற்றும டேவிட் வார்னர் ஆகியோரின் தடைக்காலம் வரும் 28ம் தேதியோடு முடிவடைகிறது. 

இந்திய அணியுடனான தொடரை முடித்துள்ள ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக  பாகிஸ்தானுடன் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. 

இந்த தொடரில் 4வது போட்டி மார்ச் 29ம் தேதி நடைபெறுகிறது. எனவே 4வது மற்றும் 5வது போட்டியில் ஸ்மித்தும், டேவிட்டும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னரின் பெயர்கள் இடம்பெறவில்லை.

இந்நிலையில் உலகக்கோப்பைக்கு முன்னர் துபாயில் ஒரு கூட்டம் நடத்தப்பட இருப்பதாகவும், அதில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணைந்துக்கொள்வார்கள் என்றும் அந்தஅணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த கூட்டத்தில் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close