தோனி என்னை பலமுறை காப்பாற்றினார்: இஷாந்த் ஷர்மா ஓபன் டாக்

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 07:51 pm
dhoni-saved-me-a-few-times-ishant-sharma

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பவுலரான இஷாந்த் சர்மா, தற்போது அணியில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், முன்னாள் கேப்டன் தோனி தன்னை பலமுறை அணியிலிருந்து நீக்கப்படாமல் பாதுகாத்ததாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுள் ஒருவர் இஷாந்த் சர்மா. சிறந்த வீரராக பார்க்கப்பட்டாலும், கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து உச்சகட்ட பெர்ஃபார்மன்ஸ் வழங்காததால், அணியில் தொடர்ந்து இடம்பெறாமல் இருந்தார். ஆனால், தற்போது இந்திய டெஸ்ட் அணியில் அவர் முக்கிய இடம் வகிக்கிறார். 

தான் அணியில் இருந்து நீக்கப்படாமல் முன்னாள் கேப்டன் தோனி பாதுகாத்ததாக ஷர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியபோது, "மஹி பாய் என்னை சிலமுறை அணியிலிருந்து நீக்க விடாமல் பார்த்துக் கொண்டார். எனக்கு நல்ல ஆதரவு கொடுத்தார்.

இப்போது அணியின் மூத்த வீரராக இருப்பதினால், கேப்டன் கோலி என்னிடம் வந்து, நீங்கள் தொடர்ந்து கடுமையாக விளையாடி சோர்ந்து இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும், ஆனாலும் அணியின் மூத்த உறுப்பினரான நீங்கள், மீண்டும் விளையாட வேண்டும், என்று கூறுகிறார். 

முன்னதாக சிறப்பாக பந்து வீசுவது மட்டுமே எனது நோக்கமாக இருந்தது. ஆனால் இப்போது சிறப்பாக பந்து வீசி விக்கெட் எடுக்க வேண்டும் என்று கருதுகிறேன். விக்கெட் எடுத்தால் மட்டுமே எண்ணங்களை மாற்ற முடியும்" என்று அவர் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close