தோனி போன்ற ஜாம்பவானுடன் என்னை ஒப்பிடாதீர்கள்: ரிஷப் பண்ட்

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 10:58 am
don-t-compare-legend-ms-dhoni-with-me-rishabh-pant-gives-fitting-reply-to-his-critics

தோனியோடு தன்னை ஒப்பிடாதீர்கள் என்று இளம் வீரர் ரிஷப் பண்ட் கூறியுள்ளார். 

சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கடைசி மூன்று போட்டிகளில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த போட்டிகளில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் செயல்பட்டார். 

அதில் மொஹாலியில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இரண்டு முறை முக்கியமான ஸ்டம்பிங்கை ரிஷப் பண்ட் தவறவிட்டார். அப்போது மைதானத்தில் இருந்தவர்கள் "தோனி, தோனி" என்று கூச்சலிட்டனர். மேலும் பலரும் சமூக வலைதளங்களில் பண்ட்டை கடுமையாக விமர்சித்தனர். 

இந்நிலையில் இதுகுறித்து முதன்முறையாக பண்ட் பேசியுள்ளார். அவர் பேசும் போது, "ஒப்பிடுவது பற்றி நான் எப்போதும் அதிகமாக யோசிக்க மாட்டேன். ஒரு வீரராக நான் தோனியிடம் இருந்து கற்றுக்கொள்ள நினைக்கிறேன். தோனி இந்த விளையாட்டின் ஜாம்பவான். அவருடன் மக்கள் என்னை ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை. ஆனால் என்னால் அதனை தடுக்க முடியாது. நான் அவர் அருகில் இருக்கிறேன். அவரிடம் என் விளையாட்டை எப்படி மெறுக்கேற்றிக்கொள்வது என்பது பற்றி பேசுகிறேன்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close