நாளை வெளியாகும் ஐபிஎல் முழு அட்டவணை?

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 11:04 am
full-indian-premier-league-ipl-2019-schedule-likely-to-be-released-on-monday-bcci-official

2019 ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை நாளை வெளியாகும் என்று பிசிசிஐ வட்டாரங்ள் கூறுகின்றனர். 

இந்தியாவின்  கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படுவது இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர். ஆண்டுதோறும் கோலாகலமாக நடக்கும் இந்த உள்நாட்டு கிரிக்கெட் தொடர் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் இருந்தாலும் முழுக்க முழுக்க இந்தியாவில் தான் நடைபெறும் என்று முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதில் முதல் இரண்டு வாரத்திற்கான அட்டவணை  கடந்த மாதம் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் நாளை முழு அட்டவணை வெளியாகும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றனர். 

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நாட்கள் குறித்து முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாளை ஐபிஎல் அட்டவணை வெளியாகிறது. இந்தாண்டு ஐபிஎல் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும் மோதுகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close