ஐபிஎல் 2019: ஹைதராபாத் அணியுடன் இணைந்த டேவிட் வார்னர்

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 12:10 pm
sunrisers-hyderabad-welcome-back-david-warner-on-his-arrival

பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் தடைக்காலம் அனுபவித்து வரும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், ஐபிஎல் தொடரில் விளையாட ஹைதராபாத் வந்தார். 

கடந்தாண்டு மார்ச்  மாதம் சென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி தடைக்காலம் அனுபவித்து வரும் ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவன் ஸ்மித் மற்றும டேவிட் வார்னர் ஆகியோரின் தடைக்காலம் வரும் 28ம் தேதியோடு முடிவடைகிறது. 

இந்நிலையில் அவர் இந்தாண்டு நடைபெற இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட உள்ளார். இதற்காக அவர் ஹைதராபாத் வந்தார். அவருக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

சன்ரைசர்ஸ் அணி இதுவரை ஒரு முறை மட்டுமே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அந்த தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் டேவிட் வார்னர். எனவே அவருக்கு இந்தியாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அவர் கடந்தாண்டு பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியதால் ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் கேப்டனாக செயல்பட்டார். அந்த அணி கடந்தாண்டு இறுதிப்போட்டி வரை வந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close