யாரு பெஸ்ட்- சச்சினா? கோலியா?...: ரிக்கி பாண்டிங்கின் பதில்

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 12:41 pm
ricky-ponting-hails-indian-skipper-as-the-best-ever-odi-batter

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வீரர்களாக திகழும் சச்சின் மற்றும் விராட்கோலி ஆகியோருக்கு இடையே யார் சிறந்த வீரர் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சச்சின் தான் ஜாம்பவான் என்று ரிக்கி பாண்டிங் பதில் அளித்துள்ளார். 

கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சினா? கோலியா எனும் விவாதங்கள் என்றும் முடிவில்லாமல் நடந்துக்கொண்டே இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங்கிடம் இதே கேள்வி கேட்கப்பட்டது.

ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில் டெல்லி அணியினருடன் பிசியாக இருந்த ரிக்கி பாண்டிங் இதுகுறித்து பேசும் போது, "விராட்டின் கிரிக்கெட் வாழ்க்கை முடியும் போது தான் அவரை பற்றி நாம் பேச முடியும். அப்போது தான் நமக்கு முழுமையான பார்வை கிடைக்கும். சச்சின் ஒரு ஜாம்பவான். ஆம், விராட் கோலி ரன்களை குவித்துக்கொண்டு இருக்கிறார் தான். அவரது டெஸ்ட் போட்டி சராசரி 50க்கும் மேல் இருக்கிறது. ஆனால் சச்சின் இதனை 200வது டெஸ்ட் போட்டி வரை தக்கவைத்துக்கொண்டார்.

கோலியின் ஒருநாள் போட்டி சாதனைகளையும் நாம் பார்க்க வேண்டும். நம்பமுடியாத அளவுக்கு அவை இருக்கிறது. அதனால் தான் இந்திய அணி மிகவும் ஆபத்தான அணி என்ற நான் கூறுகிறேன். விராட் கோலிக்கு உலகக்கோப்பை சிறப்பான தொடராக இருந்தால், இந்திய அணி கோப்பையை வெல்லும். 

அவர் ஒருநாள் போட்டியில் குவித்திருக்கும் ரன்கள் அவர் பெஸ்டான வீரர் என்பதை காட்டுகிறது. அவருக்கு என்ன வயது இருக்கும? 30... அவர் இன்னும் 200 போட்டிகளில் விளையாடுவார். அவர் சிறந்த வீரர் என்பதை யாரும் மறுத்துப் பேசமாட்டார்கள் என்று நினைக்கிறேன்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close