உலகக் கோப்பை போட்டிக்கு தயாராக ஐபிஎல் உதவும்: கேரி கிறிஸ்டன்!

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 07:45 pm
ipl-will-help-world-cup-preparation-gary-kirsten

ஐபிஎல் தொடரில் இந்திய அணி வீரர்கள் விளையாடுவது, உலகக்கோப்பை போட்டிக்கு தயாராக அவர்களுக்கு உதவியாக இருக்கும், என வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ராவும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் இந்திய அணி விளையாடுவது உலகக்கோப்பையில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை குறைக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா அதை மறுத்துப் பேசியுள்ளார். ஐபிஎல்லின் முக்கியத்துவம் குறித்து அவர் பேசியபோது, "ஐபிஎல் மிகவும் கடினமான ஒரு தொடர். இது சர்வதேச போட்டிகள் போன்றதாகும். அதனால்தான் அனைவரும் இதில் விளையாட வேண்டும் என எண்ணுகின்றனர். இந்த கடினமான போட்டிகளை தாண்டி உலகக்கோப்பை போட்டிக்கு செல்வது நல்ல விஷயம் தான்.

விராட் கோலியிடம் சென்று ஐபிஎல்-லில் விளையாடாமல், உலகக்கோப்பைக்கு வாருங்கள் என்று சொன்னால் அது சரியல்ல. ஐபிஎல் இறுதிப் போட்டிக்கும், இந்தியாவின் முதல் உலகக்கோப்பை போட்டிக்கும் இடையே, மூன்று வார இடைவெளி இருக்கிறது. மூன்று வாரங்கள் என்பது போதுமான நேரம் தான். ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் கூட சும்மா இருந்துவிட முடியாது. தொடர்ந்து பயிற்சி எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

2011ல் இந்திய அணி உலக கோப்பை வென்றபோது பயிற்சியாளராக இருந்த, கேரி கிறிஸ்ட்டன், தற்போது ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக உள்ளார். நெஹ்ராவின் கருத்துக்கள் சரிதான் என்று அவர் தெரிவித்தார். "ஐபிஎல் தொடர் கடினமானது. இந்திய வீரர்களுக்கு உண்மையிலேயே அதில் பங்கேற்பது நல்ல விஷயம் தான். உலகக்கோப்பைக்கு தயாராக உதவும்" என்று கிறிஸ்டன் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close