ஐபிஎல் போட்டியை பார்க்க செல்ல பிராணிகளையும் அழைத்து செல்லலாம் ! எப்படி தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 06:35 pm
ipl-2019-rcb-takes-initiative-of-allowing-pets-during-home-matches

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளை பார்க்க, ரசிகர்கள் தங்கள் செல்ல பிராணிகளை அழைத்து வருவதற்கு போட்டி நடத்துகிறது ஆர்சிபி அணி.

இந்திய அணிய கேப்டன் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஆனால் அதிக முறை கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அளவுக்கு பெங்களூரு அணிக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

இந்நிலையில், அவர்களின் ரசிகர்களை மேலும் கவரும் விதத்தில் புதிய முயற்சியை அந்த அணி எடுத்துள்ளது. பொதுவாக வீட்டில் செல்ல பிராணிகளை வைத்திருப்பவர்கள் மைதானத்திற்கு வந்து கிரிக்கெட் போட்டிகளை பார்க்க வருவதில்லை. எனவே அவர்கள் தங்கள் செல்ல பிராணிகளை கிரிக்கெட் மைதானத்திற்கு அழைத்து வந்து போட்டியை பார்க்கும் வண்ணம் ஆர்சிபி ஏற்பாடு செய்துள்ளது. 

ஒவ்வொரு முறை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடக்கும்போதும், சில ரசிகர்கள் மட்டும் தங்கள் செல்ல பிராணிகளை அழைத்து வரலாம். அவர்கள் அமர்வதற்காக பிரத்யேக இடம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு 'Dogout' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

 

 

இந்த பகுதிக்கான டிக்கெட்கள் விற்கப்படாது, இந்த டிக்கெட்களை பெற  ‘selfie with your pet’ என்ற போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். அவர்களில் வெற்றிப்பெறுபவர்களுக்கு தங்கள் செல்ல பிராணிகளை அழைத்துவர வாய்ப்பு கிடைக்கும். 

ஆர்சிபியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close