சென்னையில் 7 போட்டிகள்... ஐபிஎல் அட்டவணை வெளியீடு!

  Newstm Desk   | Last Modified : 19 Mar, 2019 05:31 pm
ipl-group-stages-schedule-announced

ஐபிஎல் தொடரின் குரூப் போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டி சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், எல்லா அணிகளும் தங்களது மைதானத்தில் சரி பாதியாக 7 போட்டிகளில் விளையாடுகின்றன. 

வழக்கம் போல, நடப்பு சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், தங்களது சேப்பாக்கம் மைதானத்தில் துவக்க விழாவுடன் முதல் போட்டியில் விளையாடுகிறது. ஏற்கனவே அறிவித்தது போல், இந்த போட்டியில், சிஎஸ்கே அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது. அதை தொடர்ந்து, மார்ச் 31ல் ராஜஸ்தான், ஏப்ரல் 6ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஏப்ரல் 9ல் கொல்கத்தா, ஏப்ரல் 23ல் ஹைதராபாத், ஏப்ரல் 26ல் மும்பை மற்றும் மே 1ல் டெல்லி ஆகிய அணிகளுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடுகிறது. இதில், துவக்க போட்டி உட்பட 6 போட்டிகள் இரவு 8 மணிக்கு நடைபெறுகின்றன.

மார்ச் 26ல் டெல்லி, ஏப்ரல் 3ல் மும்பை, ஏப்ரல் 11ல் ராஜஸ்தான், ஏப்ரல் 14ல் கொல்கத்தா, ஏப்ரல் 17ல் ஹைதராபாத், ஏப்ரல் 21ல் பெங்களூரு, மே 5ல் பஞ்சாப் ஆகிய ஊர்களுக்கு சென்று சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. 

கடைசி குரூப் போட்டி மே 5ம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close