உலகக்கோப்பை அணியில் ரிஷப் பண்ட் வேண்டும் : ஆதரவு தெரிவிக்கும் ஜாம்பவான்கள்!

  Newstm Desk   | Last Modified : 20 Mar, 2019 10:26 am
sourav-ganguly-ricky-ponting-want-rishabh-pant-to-be-india-s-no-4-at-world-cup

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இருக்க வேண்டும் என்றும், அவர் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய  வேண்டும் என்றும் கிரிக்கெட் ஜாம்பவான்களான கங்குலி மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இங்கிலாந்தில் மே 30ம் தேதி  துவங்க இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பாக இந்திய அணியின் நான்காவது வீரர் யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. அதற்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது விருப்பத்தை கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல் அணியின் பேட்டிங் ஆலோசகராக இருக்கும் பாண்டிங் ''ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் நான்காவது வீரர் இடத்துக்கு தகுதியானவர்'' என்று கூறியுள்ளார். டெல்லி வீரர்கள் ஐபிஎல்லில் கவனம் செலுத்துவதாகவும், அவர்கள் சிறப்பாக ஆடி உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் டெல்லி அணியின் பேட்டிங் ஆலோசகரான கங்குலி கூறும்போது, "நான்காவது இடத்துக்கு புஜாராவை பரிந்துரைப்பேன். காரணம், புஜாராவின் சமீபத்திய ஃபார்ம் தான். நான் கேப்டனாக இருந்தபோது ட்ராவிட் எனக்கு அளித்த பங்களிப்பை புஜாரா அணிக்கு அளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். அதுதவிர பண்ட் மற்றும் ராயுடு சிறந்த தேர்வாக இருப்பார்கள். அதேபோல கோலி எங்கு ஆடினாலும் ரன் குவிப்பார். ஆனால் அவர் 3ம் நிலையில் ஆடுவதையே விரும்புகிறேன்" என்றார். 

 newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close