ஐபிஎல் 2019: சென்னை அணியின் நட்சத்திர வீரர் விலகல்

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 11:59 am
lungi-ngidi-ruled-out-of-tournament

வரும் 23ம் தேதி தொடங்கவிருக்கும் 2019க்காக ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி, தசை பிடிப்பு காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான லுங்கி நிகிடி இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரரான லுங்கி நிகிடி, இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தார். இலங்கைக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அவர் அடுத்ததாக நடைபெற்ற டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டார். எனவே அவர் ஐபிஎல் தொடரிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின்முக்கியமான பந்துவீச்சாளராக லுங்கி நிகிடி திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close