ஐபிஎல்-ல் தோனி எந்த இடத்தில் விளையாடுவார்: ஸ்டீபன் ஃபிளெமிங்

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 12:38 pm
ms-dhoni-will-bat-at-no-4-fleming

ஐபிஎல் 2019 தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் நேற்று நடந்த பத்திரியாளர்கள் சந்திப்பின் போது, சென்னை அணி கேப்டன் தோனி 4வது இடத்தில் களமிறங்கி விளையாடுவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் கூறினார். 

மீண்டும் ஒரு முறை கோப்பை ஏந்தும் முனைப்போடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை மறுநாள் ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. 

இந்நிலையில் நேற்று சென்னை அணியின் பிரான்சைஸ் பொருட்களின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பேசிய சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங், "கடந்த சீசனில் தோனி 4வது வீரராக களமிறங்கினார். ஆனால் நாங்கள் அவரை சற்று இணக்கமான இடங்களிலும் பயன்படுத்தினோம். இதை நாங்கள் மாற்ற விரும்பவில்லை. கடந்த 10 மாதங்களாக தோனியின் பேட்டிங் மிகச்சிறப்பாக உள்ளது.

பேட்டிங் வரிசை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. மற்ற அணிகளுடன் எங்களது அணியின் சமநிலையை ஒப்பிடும் பணியை நாங்கள் செய்வதில்லை. ஏனெனில் மற்ற அணிகளை பார்க்க ஆரம்பித்தால் நம்மிடம் உள்ள நல்லது அல்லது கெட்ட விஷயங்களை தெரிந்து கொள்வதில் இருந்து விலகிவிடுவோம். எல்லா அணியிலும் போதுமான அளவிற்கு சிறந்த வீரர்கள் உள்ளனர். அதனால் மனப்பாங்கு, அணியின் சுற்றுச்சூழல், கலாச்சாரம் ஆகியவற்றின் வழியே வெற்றியின் பெரிய தருணங்களை அடைய முடியும். கடந்த வருடம் நாங்கள் பெரிய தருணங்களை வென்றோம்" என்றார். 

இந்த நிகழ்ச்சியில் கேதர் ஜாதவ்வும் பங்கேற்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close