ஆர்சிபி எனது குடும்பம்: யுஸ்வேந்திர சாஹல்

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 09:43 am
royal-challengers-bangalore-is-like-a-family-to-me-says-yuzvendra-chahal

கடந்த ஆறு ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருவதாகவும் அந்த அணி தனது குடும்பம் போல என்றும் இளம் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நாளை ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொர் துவங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. 

இந்நிலையில் பெங்களூர் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் அந்த அணிக்காக விளையாடுவது குறித்து பேட்டி அளித்துள்ளார். இந்தியாவின் முக்கிய பந்துவீச்சாளராக திழும் சாஹல் இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கடந்த 6 ஆண்டுகளாக நான் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறேன். விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் போன்ற மூத்த வீரர்களுடன் விளையாடுவதில் மகிழ்ச்சி.பெங்களூரு அணியை என் குடும்பம் போல தான் நினைக்கிறேன். என்னால் வேறு அணிக்காக விளையாடுவது குறித்து யோசிக்க முடியாது" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close