அதிரடிக்கு தயாராக இருக்கிறார் டேவிட் வார்னர்: விவிஎஸ் லக்ஷ்மன்

  Newstm Desk   | Last Modified : 23 Mar, 2019 04:58 am
david-warner-raring-to-go-vvs-laxman

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டுக்கு தடைசெய்யப்பட்ட ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர், ஐபிஎல் தொடரில் போட்டியிட திரும்பியுள்ள நிலையில், அவர் அதிரடி காட்ட ஆர்வமாக உள்ளதாக, ஹைதராபாத் அணியின் விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர், கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடை விதிக்கப்பட்டார். அதன் பின்னர் சமீபத்தில் முழங்கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மீண்டும் விளையாட திரும்பினார். ஆஸ்திரேலியாவில் சிட்னி அணிக்காக அதிரடியாக விளையாடிய அவர், தற்போது ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாட திரும்பியுள்ளார்.

வார்னர் குறித்து பேசிய அணியின் ஆலோசகர் விவிஎஸ் லக்ஷ்மன், வார்னரின் உடல்நிலை மிகவும் சிறப்பாக இருப்பதாகவும், அதிரடியாக விளையாட அவர் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். "வார்னர் மிகவும் கடினமாக உழைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அவரின் ஆட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது. ஹைதராபாத்தில் 2 பயிற்சி போட்டிகளில் விளையாடிய வார்னர் நல்ல பார்மில் இருந்தார். அது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது" என்று கூறினார் லக்ஷ்மன்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close