2019 ஐ.பி.எல் திருவிழா இன்று தொடங்குகிறது! முதல் போட்டியில் மோதும் சென்னை - பெங்களூரு அணிகள்!

  Newstm Desk   | Last Modified : 23 Mar, 2019 12:02 pm
ipl-2019-starts-today-first-match-csk-vs-rcb

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த 12வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டித் தொடர் இன்று(மார்ச் 23) சென்னையில் தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

முதல் போட்டியே சென்னையில் நடைபெறுவதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் முதல் போட்டியிலே சென்னை அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையிலும் உள்ளனர். 

சென்னை அணியை பொறுத்தவரை இரண்டு ஆண்டுகளாக போட்டியில் பங்கேற்காத சென்னை அணி கடந்த முறை களமிறங்கி கோப்பையையும் கைப்பற்றியது. தொடர்ந்து 3 முறை இதுவரை கோப்பையை தன்வசப்படுத்தியுள்ளது சென்னை அணி. அதேபோன்று இந்த முறையாவது தொடரில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் விராட் கோலியின் பெங்களூரு அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. 

எனவே இன்று முதல் போட்டியிலே இரண்டு அணிகளும் மோதுவதால், போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

மேலும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக சேப்பாக்கம் மைதானம் இருக்கும் என்று கருதப்படுவதால் இரு அணிகளும் பந்துவீச்சில் கவனம் செலுத்துகின்றன. 

முன்னதாக, ஐ.பி.எல் தொடக்க நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு அதற்கான பணத்தையும், முதல் போட்டிக்கான வருவாயையும் புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்திற்கு அளிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close