ஐபிஎல் துவக்க விழா நிதியை இந்திய ராணுவத்துக்கு வழங்கியது பிசிசிஐ

  Newstm Desk   | Last Modified : 23 Mar, 2019 07:02 pm
ipl-opening-ceremony-funds-donated-to-pulwama-indian-army

சென்னையில் இன்று ஐபிஎல் போட்டிகள் துவங்கும் நிலையில், பிரம்மாண்ட துவக்க விழாவை ரத்து செய்த பிசிசிஐ, அதற்காக ஒதுக்கப்பட்ட 20 கோடி ரூபாயை இந்திய ராணுவத்துக்கு வழங்க முடிவெடுத்துள்ளது.

சர்வதேச அளவில் மிகப் பிரபல கிரிக்கெட் தொடரான ஐபிஎல், இன்று சென்னையில் துவங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸுடன் முதல் போட்டியில் மோதுகிறது. வழக்கமாக, ஐபிஎல் முதல் போட்டி, துவக்க விழாவை தொடர்ந்து நடைபெறும். 

ஆனால், சமீபத்தில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த ஐபிஎல் துவக்க விழா கொண்டாட்டங்களை ரத்து செய்ய பிசிசிஐ முடிவெடுத்தது. மேலும், ஐபிஎல் துவக்க விழாவுக்காக ஒதுக்கப்பட்ட 20 கோடி ரூபாய் நிதியை, இந்திய ராணுவத்துக்கு வழங்கவும் முடிவெடுத்துள்ளது. இதன்படி, ராணுவத்துக்கு ரூ.11 கோடி, சி.ஆர்.பி.எஃப்-க்கு 7 கோடி, கடற்படைக்கு ரூ.1 கோடி, விமானப்படைக்கு ரூ.1 கோடி என வழங்குகிறது பிசிசிஐ. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close