ஐபிஎல்: ரஸ்சல் அதிரடியில் கந்தலான ஹைதராபாத்!!

  Newstm Desk   | Last Modified : 24 Mar, 2019 08:22 pm
russel-smashes-kolkata-into-victory-over-hyderabad

ஐபிஎல் தொடரின் முக்கிய போட்டியில், ஆண்ட்ரே ரஸ்சல் 19 பந்துகளில் 49 ரன்கள் விளாச, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி, டேவிட் வார்னர் அதிரடியில் சிறப்பான துவக்கம் பெற்றது. முதல் விக்கெட்டுக்கு வார்னர் மற்றும் பேர்ஸ்டோ சேர்ந்து 118 ரன்கள் விளாசினர். வார்னர் 85 ரன்கள் அடிக்க, பேர்ஸ்டோ 39 ரன்கள் அடித்தார். தொடர்ந்து வந்த விஜய் ஷங்கர் 24 பந்துகளுக்கு 40 ரன்கள் விளாச, 3 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் 181 ரன்கள் அடித்தது.

182 ரன்கள் இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர் லின், 7 ரன்களுக்கே அவுட்டாக, அந்த அணி தடுமாறியது. மற்றொரு தொடக்க வீரரான நிதிஷ் ராணா, 68 ரன்கள் விளாசினார். இறுதியில் 18 பந்துகளில் 53 ரன்கள் எடுக்க வேண்டிய கடினமான நேரத்தில், அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்சல், 19 பந்துகளில் 49 ரன்கள் விளாசி அணியின் வெற்றியை உறுதியை செய்தார். 

இறுதியில் 3 விக்கெட் இழப்பிற்கு 19.4 பந்துகளில் கொல்கத்தா இலக்கை எட்டியது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close