கேப்டன்களின் வாக்குறுதியை மீறினாரா அஷ்வின்?

  Newstm Desk   | Last Modified : 26 Mar, 2019 06:21 pm
did-ashwin-go-back-on-mankad-agreement-by-captains

பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின், மங்கட் முறையில் ராஜஸ்தானின் பட்லரை அவுட்டாகியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதுபோல செய்யமாட்டோம் என அனைத்து கேப்டன்கள் வாக்குறுதி அளித்ததாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் ஷுக்லா தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் கேப்டன் அஷ்வின், எதிரணியின் அதிரடி வீரர் ஜாஸ் பட்லரை, மங்கட் முறையில் அவுட்டாக்கினார். சர்வதேச போட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்படாத மங்கட் முறையில், பவுலரின் பக்கம் நிற்கும் பேட்ஸ்மேன் பவுலர் பந்தை வீசும் முன், கிரீஸை விட்டு வெளியேறினால் ஸ்டம்ப் செய்து அவுட்டாக்கப்படலாம்.

பொதுவாக, இதுபோல கிரீஸை விட்டு அடிக்கடி வெளியேறும் பேட்ஸ்மேன்களுக்கு, பவுலர்கள் ஒரு எச்சரிக்கை கொடுப்பது வழக்கம். ஆனால், அதிரடியாக விளையாடி வந்த பட்லரை அஷ்வின் எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் இப்படி அவுட் செய்தது சர்ச்சையை கிளப்பியது. அஷ்வினின் செயல், பஞ்சாப் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தாலும், அது கடுமையாக விமர்சனத்துக்குள்ளானது.

கிரிக்கெட் விதிகளின் படி அஷ்வின் செய்தது சரி என்றாலும், பொதுவாக சர்வதேச அளவில் மங்கட் செய்வதை பெரும்பாலான வீரர்கள் தவிர்ப்பது வழக்கம். அஷ்வினின் செயல், சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களுக்கு உள்ளானது.

ஷேன் வார்னே உள்ளிட்ட பலர் அஷ்வின் செய்தது தவறு என தெரிவித்தனர். இந்த நிலையில், இது குறித்து டிவிட்டரில் பதிவிட்ட ஐபிஎல் தலைவர் ராஜீவ் ஷுக்லா, "ஐபிஎல் கேப்டன்கள் மற்றும் நடுவர்களுடன் நான் கலந்து கொண்ட ஒரு சந்திப்பில், எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியேறினால், அவரை ரன் அவுட் செய்யக் கூடாது என முடிவெடுக்கப்பட்டது" என்றார் கூறினார். 

இதனால், அஷ்வின் தான் கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டதாக அவருக்கு மேலும் நெருக்கடி எழுந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close