பஞ்சாப்புக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்த மும்பை!

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2019 06:24 pm
mumbai-set-177-target-for-punjab

சண்டிகரில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், குவின்டின் டி காக்(60) அரைசதம் அடிக்க, மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் கேப்டன் அஷ்வின் 25 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்தது. முதலில் பேட் செய்த துவக்க வீரர் ரோஹித் ஷர்மா 31 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டானார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டி வந்த குவின்டின் டி காக் 39 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். அடுத்து வந்த வீரர்கள் நீண்ட நேரம் நிலைக்காமல் விக்கெட்டை பறிகொடுக்க, மும்பை திணறியது. 

இறுதியில், ஆல் ரவுண்டர் ஹர்டிக் பாண்ட்யா 19 பந்துகளை 31 ரன்கள் விளாசினார். இறுதியில் மும்பை 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. அஷ்வின், ஷமி மற்றும் வில்ஜோயன் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close