ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு 167 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்

  Newstm Desk   | Last Modified : 01 Apr, 2019 10:58 pm
ipl-cricket-delhi-needs-167-runs-to-win

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் பஞ்சாப் அணி, 167  ரன்களை  டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் ராகுல், சாம் ஆகியோர் முதலில் களம் இறங்கினர்.  இதில் ராகுல் 15 ரன்களுடன் அவுட் ஆனார். பின்னர் சாமுடன் மாயன்க் அகர்வால் ஜோடி சேர்ந்தார். பின்னர் 20 ரன்களில் சாம் குரனும் அவுட்டானார்.  அப்போது நான்கு ஓவர்களில் 35 ரன்கள் எடுத்திருந்தனர். இதன் பின்னர் மாயன்க் அகர்வால் 6 ரன்களுடன் ரன் அவுட் ஆனார்.

கடைசி இரண்டு பந்தில் ஒரு 4 மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து மந்தீப் சிங் அசத்தினார். 

ஆட்டத்தின் முடிவில் 20 ஒவருக்கு பஞ்சாப் அணி 166 ரன்களை எடுத்து, டெல்லி அணிக்கு 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close