ஐபிஎல்: டெல்லி அணியை வீழ்த்தியது பஞ்சாப் !

  Newstm Desk   | Last Modified : 02 Apr, 2019 07:37 am
ipl-2019-punjab-beat-delhi

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று பஞ்சாபில் நடைபெற்ற போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. 

இன்று (திங்கட்கிழமை) பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் ராகுல், சாம் ஆகியோர் முதலில் களம் இறங்கினர்.  இதில் ராகுல் 15 ரன்களுடன் அவுட் ஆனார். பின்னர் சாமுடன் மாயன்க் அகர்வால் ஜோடி சேர்ந்தார். பின்னர் 20 ரன்களில் சாம் குரனும் அவுட்டானார்.  அப்போது நான்கு ஓவர்களில் 35 ரன்கள் எடுத்திருந்தனர். இதன் பின்னர் மாயன்க் அகர்வால் 6 ரன்களுடன் ரன் அவுட் ஆனார். கடைசி இரண்டு பந்தில் ஒரு 4 மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து மந்தீப் சிங் அசத்தினார். இறுதியில் 20 ஒவருக்கு பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்து, டெல்லி அணிக்கு 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

பின்னர் டெல்லி அணியில் பிரித்வி, ஷிக்கார் ஆகியோர் களம் இறங்கினர். பிரித்வி ரன் எதுவும் எடுக்காமலும், ஷிக்கார் 30 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் 28 ரன்களுடனும் ஆட்டம் இழந்தனர். 3 விக்கெட் இழப்பின்போது, 10 ஓவரில் 83 ரன்கள் எடுத்தனர். 

பின்னர் ரிஷாப், கோலின் இங்ராம் ஆகியோர் ஆக்ரோஷமாக ரன்களை குவிக்கத் தொடங்கினர்.  ரிஷாப் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கிரிஸ் மோரிஸ் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். இதனையடுத்து கோலின் இங்ராமுடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார்.  கோலின் 38 ரன்கள் எடுத்து அவுட் ஆன பின், ஹர்ஷ்லால் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். ஹனுமா விஹாரி 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

இதன் பின்னர்,  18.4 ஓவரில், 148 ரன்கள் எடுத்திருந்தபோது, காகிசோ - அவேஷ் கான் ஆகியேர் ஜோடி சேர்ந்தனர். காகிசோவும் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். 19.2 ஓவரில் 152 ரன்கள் எடுத்திருந்தபோது, களமிறங்கிய கடைசி ஆட்டக்காரரான சந்தீப் ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். 

இதனால் இன்று நடைபெற்ற போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close