சென்னை அணிக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை !

  Newstm Desk   | Last Modified : 03 Apr, 2019 09:52 pm
ipl-2019-mumbai-sets-chennai-171-for-win

மும்பையில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை அணி.

மும்பையில் தற்போது நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியும் சென்னை அணியும் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. 

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிவின்டன் டி காக், ரோஹித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர்.  கிவின்டன் டி காக் 4 ரன்களில் அவுட் ஆனதையடுத்து சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார். 

ரோஹித் சர்மா 13 ரன்களில் அவுட் ஆனதையடுத்து சூர்யகுமாருடன், யுவராஜ் ஜோடி சேர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக யுவராஸ் சிங் 4 ரனிகளிலேயே ஆட்டமிழந்தார். இதனால், சூர்யகுமார், க்ருனுல் பாண்ட்யா ஆகியோர் தொடர்ந்தனர். 

க்ருனுல் பாண்ட்யா  42 ரன்களுடன் வெளியேறினார். இதனையடுத்து, சூர்யகுமாரும், ஹாட்ரிக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். ஆட்டம் சூடுபிடித்த நிலையில் 59 ரன்களுடன் சூர்யகுமார் ஆட்டமிழந்தார். இதனையடுத்து போலர்டு களம் இறங்கினார். 

இறுதியில் 20 ஓவரில், 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்து, 171 ரன்களை சென்னை அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close