ஐ.பி.எல் போட்டிகளில் 100வது வெற்றியை பதிவு செய்த முதல் அணி மும்பை இந்தியன்ஸ்!

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 04:30 pm
mumbai-indians-1st-team-to-win-100-ipl-matches

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக, மும்பை இந்தியன்ஸ் அணி  100 ஐ.பி.எல் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. 

12வது ஐ.பி.எல் போட்டிகள் கடந்த மார்ச் 23ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 37 ரன்னில் வெற்றி பெற்றது. இதன் மூலம், ஐ.பி.எல் போட்டியில் 100வது வெற்றியை பெற்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் பெற்றுள்ளது. 

இதுவரை 175 போட்டிகளில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நேற்று தனது 100வது வெற்றியை பதிவு செய்துள்ளது. மீதி 75 ஆட்டத்தில் தோல்வியை தழுவியுள்ளது. 

மும்பை அணிக்கு அடுத்தப்படியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 93 போட்டிகளில் வெற்றி பெற்று 2ம் இடத்திலும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 88 போட்டிகளில் வெற்றி பெற்று 3ம் இடத்திலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 79 போட்டிகளில் வெற்றி பெற்று 4ம் இடத்திலும் உள்ளன. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஐ.பி.எல் தொடர்களில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close