கோலி மட்டும் ஆடினா எப்படி சொல்லுங்க..? டெல்லிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்கு!

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 06:01 pm
bangalore-150-runs-target-delhi

பெங்களூருவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டெல்லி அணிக்கு வெற்றி இலக்காக 150 ரன்களை நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி.

முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கோலி, பார்த்தீவ் படேல் களமிறங்கினார்கள். இருவரும் பொறுமையாகவே ஆடி வந்த நிலையில், 9 ரன்களில் பார்த்தீவ் படேல் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து, டிவில்லியர்ஸ் களமிறங்கியதும் ஆட்டம் சூடுபிடிப்பது போல் போனது. ஆனால், ரபாடா பந்துவீச்சில் இங்கிராமிடம் டிவில்லியர்ஸ் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்டோய்னிஸ் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து செல்ல, அடுத்து களமிறங்கிய மொயின் அலி சிக்ஸர்கள் அடிக்க, நல்ல ஸ்கோரை பெங்களூரு எடுக்கும் என்று  ரசிகர்கள் நினைத்து கொண்டிருந்தபோது, அவர்ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார்.

யாரும் நிக்கமாட்றாங்களே... என்பது போலவே ஆடி வந்துக்கொண்டிருந்த கோலியும் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பெங்களூரு 150 ரன்கள் ஆவது எடுக்குமா?என்று எதிர்பார்த்த நிலையில், 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை அந்த அணி எடுத்தது. டெல்லி அணியில் ரபாடா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

150 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு, டெல்லி அணி தற்போது விளையாடி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close