உலக கோப்பை 2019: இந்திய கிரிக்கெட் அணி 15ம் தேதி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 01:29 pm
world-cup-cricket-2019-bcci-will-announce-indian-players-list-on-15-april

அடுத்த மாத இறுதியில் துவங்கும், உலக கோப்பை தொடருக்கான, இந்திய கிரிக்கெட் அணி, இந்த மாதம், 15ம் தேதி அறிவிக்கப்படும் என, பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

இங்கிலாந்தில், அடுத்த மாத இறுதியில் துவங்கும், 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், ஜூலையில் நிறைவடைகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட முக்கிய நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. 

இந்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை தொடர், மிக விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 
இதில் விளையாட உள்ள இந்திய கிரிக்கெட் அணி குறித்த விபரம், வரும் 15ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 

இந்த தொடரில், இ்ந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என விபரம், அப்போது தெரிய வரும். இந்த தகவலை, பிசிசிஐ அறிவித்துள்ளது. 

தங்களுக்கு பிடித்தமான வீரர்கள், இந்த பட்டியலில் இடம் பெறுவரா என, ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close