ஐபிஎல்: பஞ்சாப் அணிக்கு 151 ரன்கள் வெற்றி இலக்கு!

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 10:00 pm
ipl-srh-fixed-151-runs-target-for-kxip

மொஹாலியில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ஐதராபாத் அணி  பஞ்சாப் அணிக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ரவிசந்திரன், தமது அணி முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதையடுத்து, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும்,  பயர்ஸ்டோவும் களமிறங்கினர். 

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே முஜீப் பந்துவீச்சில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து பயர்ஸ்டோ வெளியேறினார். இதையடுத்து, வார்னருடன், விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆட, அணியின் ஸ்கோர் ஆமை வேகத்தில் உயர்ந்தது.  10 ஓவரில் ஐதராபாத்  அணி 50 ரன்களை எட்டியது.

அப்போது சங்கர் 26 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டத்தின் 11-ஆவது ஓவரில் அஸ்வின் பந்துவீச்சில், ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவரும் பெவிலியன் திரும்பினார்.
அதற்கடுத்து வார்னருடன் ஜோடி சேர்ந்த முகமது நபி, துரதிருஷ்டவசமாக, ரன் -அவுட் ஆகி, வந்த வேகத்தில் வெளியேறினார்.

இதுவரை களத்தில் நின்று போராடிய டேவிட் வார்னர் 70 ரன்களை ( நாட்-அவுட்) குவித்தார். இதில் ஒரு சிக்ஸரும், 6 பவுண்டரிகளும் அடங்கும். 20 ஓவரின் முடிவில்  ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை எடுத்தது. 151 ரன்கள் வெற்றி இலக்குடன் பஞ்சாப் அணி, தமது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close