வழக்கம்போல் ரசுல் மட்டுமே ஜொலித்தார்...கேகேஆரை 108 ரன்களில் சுருட்டிய சிஎஸ்கே...!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 09:58 pm
kolkata-target-109-runs-chennai

சென்னையில் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில், சென்னை அணிக்கு வெற்றி இலக்காக 109 ரன்களை நிர்ணயித்துள்ளது கொல்கத்தா அணி.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணியின் ஓப்பனர்களாக சுனில் நைரேன், கிறிஸ் லைன் களமிறங்கினார்கள். தொடக்கம் முதல் அதிரடியாக ஆடும் இவர்களின் ’ஜம்பம்’ சென்னை அணியிடம் பலிக்கவில்லை. முதல் ஓவரிலேயே சாஹர், லைனின் விக்கெட்டை தூக்க, அடுத்து  நைரனின் விக்கெட்டை ஹர்பஜன் சாய்த்தார்.

ரானா வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். ராபின் உத்தப்பா, கார்த்திக் ஜோடி நிலைந்து நிற்பதுபோல் விளையாடினர். ஆனால், உத்தாப்பாவின் விக்கெட்டை எடுத்தார் சாஹர். தினேஷ் கார்த்திக் மற்றும் கில்லின் விக்கெட்டை எடுத்து தன் பங்கிற்கு தாஹிர் அசத்தினார்.

இதையடுத்து எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசுல் வந்தார். 47 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கொல்கத்தா. தாஹீர் ஓவரில் ரசுலின் கேட்சை ஹர்பஜன் மிஸ் செய்தார். ஹர்பஜன் ஓவரில் சாவ்லாவை தோனி ஸ்டெம்பிங் செய்தார்.

இதற்கடுத்து ஆட்டம் சூடு பிடிக்கும், ரன் வேகம் அதிகரிக்கும் என்று பார்த்தால் ரசுல் பேட்டை சுத்துசுத்துவென சுத்தியும், அவரால் ஒன்னும் செய்ய முடியவில்லை. ஆனால், கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் 2 பவுண்டரிகள் அடித்து அவர் அரைசதம் அடித்தார். கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் எடுத்து, சென்னைக்கு 109 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

அதிகபட்சமாக ரசுல் 50 (3 சிக்ஸ், 5 பவுண்டரிகள்) நாட் அவுட். சென்னை அணி தரப்பில் சஹார் 3, தாஹீர், ஹர்பஜன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close