சென்னை அணி அபாரம்... 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 11:32 pm
ipl-chennai-beat-kolkata

சென்னையில் இன்று (9ஆம் தேதி) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், சென்னை அணி 17.2 ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணியின் ஓப்பனர்களாக சுனில் நைரேன், கிறிஸ் லைன் களமிறங்கினார்கள். தொடக்கம் முதல் அதிரடியாக ஆடும் இவர்களின் ’ஜம்பம்’ சென்னை அணியிடம் பலிக்கவில்லை. முதல் ஓவரிலேயே சாஹர், லைனின் விக்கெட்டை தூக்க, அடுத்து  நைரனின் விக்கெட்டை ஹர்பஜன் சாய்த்தார்.

ரானா வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். ராபின் உத்தப்பா, கார்த்திக் ஜோடி நிலைந்து நிற்பதுபோல் விளையாடினர். ஆனால், உத்தாப்பாவின் விக்கெட்டை எடுத்தார் சாஹர். தினேஷ் கார்த்திக் மற்றும் கில்லின் விக்கெட்டை எடுத்து தன் பங்கிற்கு தாஹிர் அசத்தினார்.

இதையடுத்து எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசுல் வந்தார். 47 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கொல்கத்தா. தாஹீர் ஓவரில் ரசுலின் கேட்சை ஹர்பஜன் மிஸ் செய்தார். ஹர்பஜன் ஓவரில் சாவ்லாவை தோனி ஸ்டெம்பிங் செய்தார்.

இதற்கடுத்து ஆட்டம் சூடு பிடிக்கும், ரன் வேகம் அதிகரிக்கும் என்று பார்த்தால் ரசுல் பேட்டை சுத்துசுத்துவென சுத்தியும், அவரால் ஒன்னும் செய்ய முடியவில்லை. ஆனால், கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் 2 பவுண்டரிகள் அடித்து அவர் அரைசதம் அடித்தார். கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் எடுத்து, சென்னைக்கு 109 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதனையடுத்து, சென்னையின் ஷானே வாட்சன், சுரேஷ் ராய்னா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.  ஷானே வாட்சன் 17 ரன்களிலும்,  சுரேஷ் ராய்னா 14 ரன்களிலும் அவுட் ஆனதால், ஃபாப் டூ, அம்பாதி ராயுடு ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். 12.2 ஓவர்களில் 70 ரன்களை எடுத்தனர்.  அம்பாதி 21 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர், கேதர் ஜாதவ் களம் இறங்கினார். 

இறுதியில், சென்னை அணி வெற்றி 17.2 ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 111 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணியை வீழ்த்தியது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close