ஐபிஎல்: பஞ்சாப்பை பழிதீர்க்குமா மும்பை?

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 04:17 pm
ipl-today-match-mumbai-vs-punjab

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணியும் மோதுகின்றன. இந்த தொடரில் இரு அணிகளும் இன்று இரண்டாவது முறையாக பலபரீட்சை நடத்தவுள்ளன.

இந்த இரு அணிகளும், முன்னதாக மொகாலியில் மோதிய ஆட்டத்தில் மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வீழ்த்தியது. அதற்கு பழி தீர்க்க இந்த போட்டியை மும்பையை பயன்படுத்திக் கொள்ளும்.

நடப்பு தொடரில் மும்பை அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்துள்ளது. அந்த அணியின் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் அறிமுக போட்டியிலேயே (ஐதராபாத்துக்கு எதிராக) 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதனால் இன்றைய போட்டியில் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தனது கடைசி ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்திய தெம்புடன் பஞ்சாப் அணி இன்று களம் காணும். அந்த அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 -இல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்துள்ளது. பேட்டிங்கில் கெய்ல், ராகுல், மயங்க் அகர்வால் நல்ல பார்மில் உள்ளனர். அஸ்வின், குர்ரான் உள்ளிட்டோர் பந்துவீச்சில் கலக்கி வருகின்றனர்.

பஞ்சாப் தனது சொந்த ஊரில் மும்பையை வீழ்த்தியது போல், பஞ்சாப்பை தனது சொந்த ஊரான மும்பையில் வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் இருப்பார்கள் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும்...பந்து தெறிக்கும்...!

இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 23 முறை மோதியுள்ளன. அதில், மும்பை 12 முறையும், பஞ்சாப் 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close