மும்பையை துவம்சம் செய்த ராகுல்... பஞ்சாப் அணி 197 ரன்கள் குவிப்பு!

  ராஜேஷ்.S   | Last Modified : 10 Apr, 2019 10:09 pm
punjab-198-runs-target-mumbai

மும்பை வான்கடே மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், மும்பை அணி வெற்றி பெற  98 ரன்களை இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ளது.

டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பொல்லார்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்ல், ராகுல் களமிறங்கினார்கள். இந்தக் கூட்டணி முதலில் சீரான வேகத்தில் ரன்களை எடுத்து வந்தனர். அதன் பின்னர், அதிரடியாக ஆடி 11 ஓவர்களில் 100 ரன்களை எடுத்தனர்.

இந்த ஜோடிகளை பிரிக்க, மும்பை பவுலர்கள்  தீவிரமாக முயன்றுக் கொண்டிருக்க, கெயில் அரைசதம் அடித்தார். பிறகு, பெக்ரெண்டார்ப் பந்துவீச்சில் குர்னல் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து கெயில் (63 ரன்) வெளியேறினார். இந்த ஜோடியின் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 116 ரன்கள் ஆகும்.

ராகுலும் அரைசதம் அடித்தார். வந்த வேகத்திலேயே மில்லரையும், கருண் நாயரையும் ஹர்திக் பாண்டியா தூக்கினார். பஞ்சாப் அணியின் ரன்னும் குறைந்து வந்த நிலையில், ஹர்திக் பாண்டியா  வீசிய 19 -ஆவது ஓவரை ராகுல் பொளந்து கட்டினார். அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார். கடைசி ஒவரில் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார் ராகுல். 63 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். அதில் ஆறு சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.

இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்து, மும்பைக்கு வெற்றி இலக்காக 198 ரன்களை நிர்ணயித்துள்ளது பஞ்சாப்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close