ஐபிஎல் 2019: மும்பை அணி வெற்றி; பொல்லார்ட் அபார ஆட்டம் !

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 06:50 am
ipl-2019-mumbai-beat-punjab

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இப்போடடியில், டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பொல்லார்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்ல், ராகுல் களமிறங்கினார்கள். இந்தக் கூட்டணி முதலில் சீரான வேகத்தில் ரன்களை எடுத்து வந்தனர். அதன் பின்னர், அதிரடியாக ஆடி 11 ஓவர்களில் 100 ரன்களை எடுத்தனர்.

இந்த ஜோடிகளை பிரிக்க, மும்பை பவுலர்கள்  தீவிரமாக முயன்றுக் கொண்டிருக்க, கெயில் அரைசதம் அடித்தார். பிறகு, பெக்ரெண்டார்ப் பந்துவீச்சில் குர்னல் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து கெயில் (63 ரன்) வெளியேறினார். இந்த ஜோடியின் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 116 ரன்கள் ஆகும்.

ராகுலும் அரைசதம் அடித்தார். வந்த வேகத்திலேயே மில்லரையும், கருண் நாயரையும் ஹர்திக் பாண்டியா தூக்கினார். பஞ்சாப் அணியின் ரன்னும் குறைந்து வந்த நிலையில், ஹர்திக் பாண்டியா  வீசிய 19 -ஆவது ஓவரை ராகுல் பொளந்து கட்டினார். அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார். கடைசி ஒவரில் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார் ராகுல். 63 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். அதில் ஆறு சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.

இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்து, மும்பைக்கு வெற்றி இலக்காக 198 ரன்களை நிர்ணயித்துள்ளது பஞ்சாப்.

பின்னர் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஆடிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சித்தேஷ் லாட் 15 ரன்னிலும், குயின்டான் டி காக் 24 ரன்னிலும் வெளியேறினர். பொல்லார்ட் தொடர்ந்து போராடினார். அவரது சிக்சரால் ஆட்டத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியது. கடைசி 6 பந்துகளில் மும்பை அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது.  

இறுதியில், மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு இது 4-வது வெற்றியும், பஞ்சாப்புக்கு இது 3-வது தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close