ஐபிஎல்: சென்னை அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்கு!

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 09:59 pm
rajastan-target-152-runs-chennai

ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற  152 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் அணி.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் தொடக்க வீரர்களாக ரஹானே, பட்லர் களமிறங்கினர். 31 ரன்களுக்கு அந்த அணியின் முதல் விக்கெட்டாக சாஹர் பந்துவீச்சில் ரஹானே (14 ரன்) அவுட் ஆனார். இவரைத்தொடர்ந்து, தாகூர் பந்துவீச்சில் பட்லரும் ( 23 ரன்) காலியானார். சஞ்சு சாம்சனும் வந்த வேகத்திலேயே செல்ல, அடுத்து வந்த ஸ்மித் சிறிது நேரமே தாக்குப்பிடித்து பெவிலியன் திரும்பினார்.

6 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்து தடுமாறி வந்த ராஜஸ்தான் அணிக்கு, பென் ஸ்டோக்ஸ் (28 ரன்) நம்பிக்கை அளிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவரும் சஹார் பந்துவீச்சில் போல்ட் ஆனார். கடைசி ஓவரை வீசிய தாகூர் 18 ரன்களை விட்டுகொடுத்ததால், கெளரவமான இலக்கை எட்டியது ராஜஸ்தான்.

இறுதியில், அந்த அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் வெற்றி இலக்குடன்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close