நடுவர்களுடன் டோனி வாக்குவாதம்: சம்பளத்தில் 50% அபராதம்

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 11:24 am
dhoni-argues-with-umpires

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டோனிக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.  இப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. போட்டியின் கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சென்னை அணி இருந்தது. கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார்.  
இந்த ஓவரில் ஒரு பந்து இடுப்புக்கு மேல் வீசப்பட்டதால், நோ பாலாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர், இல்லை என அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்துக்கொண்டிருந்த டோனி, மைதானத்துக்குள் புகுந்து அந்த பந்தை நோ-பாலாக அறிவிக்கும்படி நடுவர்களுடன் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  ஆனாலும் நடுவர்கள் அதனை ஏறக்க மறுத்தனர். 

ஆடுகளத்தில் நடுவர்களுடன் வாக்குவாதம் மேற்கொண்டதால் ஈடுபட்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டோனிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close