ஐபிஎல்: 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

  டேவிட்   | Last Modified : 13 Apr, 2019 10:34 am
ipl-delhi-beat-kolkatta

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற இன்றைய (12ஆம் தேதி) போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் 180 ரன்களுடன் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது. 

டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டென்லி, சுப்மன் கில் களமிறங்கினர். இஷாந்த் சர்மா வீசிய முதல் பந்திலேயே டென்லி போல்ட் ஆகி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். 

அடுத்து வந்தார் உத்தப்பா. இவரும், கில்லும்  நிலையாகி நின்று ஆடி அணியின் ரன்னை உயர்த்தி வந்த நிலையில், உத்தப்பா(28 ரன்) ரபாடா பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரானா, தினேஷ் கார்த்திக் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, கில் தன் பங்கிற்கு 65 ரன்கள் விளாசி அவுட்டனார். அதைத்தொடர்ந்து ரசுல், பெர்த்வேயிட் கூட்டுச் சேர்ந்தனர். இருவரும் அடித்து ஆட கூடியவர்கள் என்பதால், டெல்லி பவுலர்கள் விழிபிதுங்கி நின்றனர்.

தனது காட்டடியை ஆரம்பித்த ரசுல், வழக்கம்போல் சிக்ஸர், பவுண்டரி என  விளாசினர். ரபாடா வீசிய 18 ஓவரில் இரு சிக்ஸர்களை பறக்கவிட்டார். இவர், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோரிஸ் பந்துவீச்சில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து, ரசிகர்களை ஏமாற்றினார். ரசுல் 21 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார். அதில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து  178 ரன்களை எடுத்த கொல்கத்தா அணி, டெல்லி அணிக்கு 179 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 

பின்னர் டெல்லி அணி களம் இறங்கியது. பிரித்விஷா 14 ரன்களுடனும், ஷ்ரேயாஸ்  6 ரன்களுடனும் அவுட் ஆனதால், ஷ்கார் தவான், ரிஷப் பாண்ட் ஆகியோர் தொடர்ந்தனர். ரிஷப் பாண்ட் 46 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ஷிகாருடன் கோலின் இங்ராம் ஜோடி சேர்ந்தார். அப்போது 17 பந்துகளுக்கு 17 ரன்கள் என்ற நிலை இருந்தது. 

இறுதியில் 18.5 ஓவரில், 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை குவித்து டெல்லி அணி வெற்றி பெற்றது. ஷிகார் 97 ரன்களுடனும், கோலின் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close