அடித்து விளாசிய டி காக், ரோஹித்; ராஜஸ்தான் அணிக்கு 188 ரன்கள் இலக்கு!

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 05:59 pm
mi-score-187-5-against-rr

இன்று மும்பையில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி 188 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

ஐபிஎல் தொடரில், இன்று மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் டி காக் களமிறங்கினர். இருவருமே, ராஜஸ்தானின் பந்துகளை அடித்து விளாசினர். 32 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார் ரோஹித். ஆனால், டி காக் நின்று அடித்து, 52 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். 

தொடர்ந்து வந்த சூரியகுமார், பொல்லார்ட், சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பாண்ட்யா 11 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது மும்பை அணி. 

ராஜஸ்தான் அணி சார்பில், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குல்கர்னி மற்றும் ஜெய்தேவ் உனந்த்காட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close