மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்!

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 07:56 pm
rajasthan-royals-beats-mumbai-indians-by-4-wickets

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இன்றைய ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையே பலப்பரீட்சை நடந்தது. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு, 187 ரன்கள் எடுத்தது. 

இதை தொடர்ந்து, 188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆட்டத்தை துவங்கிய ராஜஸ்தான் அணி, துவக்கம் முதலே மிக நிதானமாகவும், அதே சமயம் ரன் குவிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டது. 

அந்த அணியில் ரஹானே மற்றும் பட்லர் ஆகியோர் மிக அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஹானே, 37 ரன்களில் வெளியேறினார். மற்றொரு துவக்க ஆட்டக்காரரனா, பட்லர், 43 பந்துகளில், 89 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

இந்நிலையில், 19.3 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 188 ரன்கள் எடுத்து, மும்பை அணியை வீழ்த்தியது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close